ஆசிரியர் தகுதி சான்றிதழ்…! 7 ஆண்டுகளுக்கு பதிலாக ஆயுள்முழுவதும் செல்லுபடியாகும்….!

Default Image

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதி சான்றிதழ் 7 ஆண்டுகளில் இருந்து வாழ்நாள் வரை நீட்டிப்பு.

ஆசிரியர் என்ற தகுதியை பெறுவதற்காக நடத்தப்படும் தேர்வு தான் TET (Teacher Eligibility Test). இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் இவர்களுக்கு வழங்க கூடிய தகுதி சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகுதி சான்றிதழானது 7 ஆண்டுகளுக்கு பதிலாக ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது 2011-ம் ஆண்டிலிருந்து தேர்ச்சி பெற்று, அவர்களது சான்றிதழ் காலாவதியாகி  இருந்தாலும், இனி ஆயுள் முழுவதும் இந்த சான்றிதழை பயன்படுத்த முடியும். மேலும், இந்த தகுதி சான்றிதழ் காலாவதியானவர்களுக்கும் புதிதாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கற்பித்தல் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இது ஆசிரியர்களின் பல ஆண்டு கோரிக்கையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்