ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகின்றன. அவை சில நேரங்களில் வேடிக்கையாகவும் சில நேரங்களில் சர்ச்சையாகவும் இருக்கும். சர்ச்சையாக வெளியாகும் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் மக்கள் தங்கள் கோபத்தை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு பெண் ஆசிரியர், மாணவனுடன் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடகாவில் சிந்தாமணி தாலுகாவில் உள்ள முருகமல்ல கிராமத்தில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் தலைமையாசிரியரும், அந்த பள்ளியின் மாணவன் ஒருவரும் சிக்கபல்லாப்பூருக்கு பள்ளியில் இருந்து ஆய்வுச் சுற்றுலா சென்றபோது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மாணவன் குர்தா மற்றும் ஜீன்ஸ் அணிந்து, தலைமையாசிரியருடன் பல விதமாக போட்டோஷூட் நடத்தி உள்ளனர். போட்டோஷூட்டின் போது, மாணவன் ஆசிரியைக்கு முத்தமிடுவது போன்றும், ஆசிரியை மாணவனுக்கு முத்தமிடுவது போன்றும், ஆசிரியையை மாணவன் தூக்குவது போன்றும், மாணவன் ஆசிரியரின் சேலையை பிடித்து இருப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
10 ஆம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அந்த ஆசிரியரின் நடத்தை குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவனின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…