அகமதாபாத்தில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள (மோட்டேரா) சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க ட்ரம்ப் மற்றும் மோடி மைதானத்துக்கு வந்தடைந்தனர். இதையடுத்து இருநாட்டு தேசிய கீதம் போடப்பட்டது. பின்னர் நமஸ்தே டிரம்ப் என்ற தலைப்பில் பிரதமர் மோடி வரவேற்பு உரையை அளித்தார். அதில் அதிபர் டிரம்ப், அவரது மனைவி மற்றும் மகளை மனதார வரவேற்கிறேன் என கூறினார். அமெரிக்க அதிபரின் பயணம் வரலாற்று சிறப்புமிக்கது என தெரிவித்து, இந்திய, அமெரிக்க உறவு சாதாரண உறவல்ல, ஆழமான நட்புறவு. அதிபர் டிரம்பின் வருகை ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எனக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் நண்பர் அதிபர் டிரம்ப் என்று பிரதமர் தெரிவித்தார்.
இதையடுத்து நமஸ்தே என கூறி உரையை தொடங்கிய ட்ரம்ப், வேற்றுமையில் ஒற்றுமை, ஜனநாயகத்தை மதிக்கும் நாடு இந்தியா என கூறி, இந்தியா எங்களது இதயத்தில் இடம் பிடித்த நாடு என தெரிவித்தார். இந்தியர்களின் ஒற்றுமை உலக நாடுகளுக்கு ஒரு உதாரணம் என்றும், அன்று டீ விற்றவர், இன்று நாட்டின் பிரதமர் என மோடியை ட்ரம்ப் புகழ்த்துள்ளார். மேலும் விவேகானந்தர் போன்ற ஞானிகள் பல நல்ல தத்துவங்களை வழங்கி சென்றுள்ளனர். இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் பிரதமர் மோடி எனவும், இந்திய படைகளுக்கு ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களை வழங்க தயார் என்று தெரிவித்தார். மேலும் விண்வெளி திட்டங்களிலும் அமெரிக்கா ஒத்துழைப்புடன் செயல்படும் என்றும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.
‘டைகர் டிரயல்’ என்ற பெயரில், இரு நாடுகளின் ராணுவ கூட்டுப்பயிற்சி நடைபெறும் எனவும் பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடன் ரூ 21.5 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் ஆகியது என கூறினார். கடந்த 70 ஆண்டுகளில் இந்தியா தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று உள்ளது.7 கோடி வீடுகளில் ஏரிவாயு உருவாக்கப்பட்டுள்ளது .இந்தியாவிற்காக மோடி இரவு பகலாக உழைக்கிறார் என கூறினார். இந்நிலையில் மோடிக்கு எப்படி அமெரிக்காவில் ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சி நடத்தப்பட்டதோ, அதேபோன்று தற்போது இந்தியாவில் அவருக்கு ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…