144 உத்தரவால் 12 கோடி கிலோ தேயிலை உற்பத்தி குறைவு!
கொரோனா ஊரடங்கால் 12 கோடி கிலோ தேயிலை சாகுபடி வழக்கத்தை விட குறைவு.
உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இந்தியாவின் அனைத்து துறைகளும் ஊரடங்கள் மூடப்பட்ட நிலையில் உள்ளது. ஓரளவு நன்றாக வந்துகொண்டிருந்த தேயிலை சாகுபடி ஒரேடியாக வீழ்ச்சி அடைந்துவிட்டதாம்.
இந்த வருடம் எப்பொழுதும் உள்ள நிலையை விட, 12 கோடி கிலோ தேயிலை சாகுபடி குறைவு ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. அது போல இந்தியாவின் ஏற்றுமதி 7 சதவிகிதம் குறையும் எனவும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35 சதவிகிதம் தேயிலை ஏற்றுமதி குறைந்துவிட்டதாகவும்தேயிலை கழகத்தின் தலைவர் கூறியுள்ளார்.