ஆந்திர பிரதேசம்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. 2014, 2019 தேர்தல்களை போல அல்லாமல் இந்த முறை பாஜக கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கிறது.
ஆந்திர பிரதேசத்தில் 16 இடங்களை கைப்பற்றிய சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பீகாரில் 12 இடங்களை கைப்பற்றிய நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆகியவை கூட்டணியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாகும்.
இந்நிலையில் நாளை தங்கள் ஆதரவு NDA எம்பிகளுடன் நாளை பாஜக டெல்லியில் முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளது. அதில் மத்திய அமைச்சரவை பற்றிய முக்கிய விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முன்னதாக, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த எம்பிக்கள் கூட்டத்தில் நாளை நடைபெறும் NDA எம்பிக்கள் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…