2025க்குள் காசநோய் ஒழிப்பு.! மருத்துவர்கள் வீரர்கள் உடையை அணியாத போர்வீரர்கள் – பிரதமர் மோடி
ரஜீவகாந்தி பல்கலைக்கழக வெள்ளி விழாவை காணொலி மூலம் தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடியின் உரை.
வீரர்களுக்கான உடையை அணியாத போர் வீரர்களாக நமது மருத்துவர்கள் உள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நமது நாட்டு மருத்துவ பணியாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2025 ஆம் அங்குக்குள் நாட்டிகளிருந்து காசநோயை முழுமையாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடக்கின்றனர் என்று கர்நாடகா மாநிலத்தில் ரஜீவகாந்தி பல்கலைக்கழக வெள்ளி விழாவை காணொலி மூலம் தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.