தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் டாக்சி ஆம்புலன்ஸ் சேவைக்கு மத்திய சுகாதாரத்துறை பாராட்டு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் காணப்படுவதுடன், தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
எனவே மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகம் காணப்படுவதால், ஆம்புலன்ஸ் சேவைகள் மருத்துவ வசதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை போக்குவதற்காக தமிழக அரசு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக ஆம்புலன்ஸ்க்கு மாற்றாக டாக்சிகளை ஆம்புலன்ஸ் ஆக மாற்றி தற்பொழுது டாக்ஸி ஆம்புலன்ஸ் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்று குறித்து ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி அவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது தமிழகத்தின் பிரதிநிதிகள் டாக்ஸி ஆம்புலன்ஸ் குறித்தும் தமிழகத்தில் அவை பயன்படுத்துவது குறித்தும் எடுத்துரைத்துள்ளனர். இந்நிலையில் இந்த டாக்ஸி ஆம்புலன்ஸ் குறித்து பட்டியலிட்டுள்ள சுகாதாரத்துறை, தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டு வரக்கூடிய டாக்சி ஆம்புலன்ஸ் சேவைக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…