கர்நாடகாவில் ஹெலி-டேக்ஸி எனும் ஹெலிகாப்டர் சேவை தொடக்கம்!
ஹெலி-டேக்ஸி எனும் ஹெலிகாப்டர் சேவை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று முதல் தொடங்கவுள்ளது.
தும்பி ஏவியேசன் என்ற நிறுவனம் இன்று முதல் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அனேகல்லில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டிக்கு முதற்கட்டமாக ஹெலி-டேக்ஸி எனும் ஹெலிகாப்டர் சேவை வழங்குகிறது. இதற்காக 6 பயணிகள் அமரக் கூடிய பெல் (Bell) 407 ரக ஹெலிகாப்டர்கள் 2, காலை ஆறரை மணி முதல் ஒன்பதரை மணி வரையும், மாலை 3 மணி முதல் ஆறேகால் மணி வரையும் இயக்கப்படுகிறது. சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கடந்து சராசரியாக 2 மணி நேரம் எடுக்கும் பயணம், ஹெலி டேக்ஸியில் 15 நிமிடமாகக் குறைகிறது. இதற்கு கட்டணம் 3 ஆயிரத்து 500 ரூபாய் என்றும், அறிமுகச் சலுகையாக பதிவு செய்யும் கார்ப்பரேட்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.