அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் எந்த பொருள்களின் விலை உயரும் ?எதன் விலை குறையும் ?இதோ முழு விவரம் ….

Default Image

இன்று அறிவிக்கப்பட்ட  பட்ஜெட்டில் மின்னணு பொருட்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால், இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள் உள்ளிட்டவற்றின் விலை உயரும்.

உள்நாட்டில் ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் செல்போன்கள் மற்றும் அவற்றின் உபகரணங்களுக்கான இறக்குமதி சுங்க வரி 15 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் ஐ போன்கள், சாம்சங், Xiomi, Oppo உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் செல்போன்களுக்கான விலை உயரும். தொலைக்காட்சி, ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவற்றின் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி ஆகிய ஆபரண உலோகங்களின் விலை அதிகரிக்கும்.

Image result for electronic goods in india

இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் ஆகியவற்றின் விலை உயரும். இறக்குமதியாகும் ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் மற்றும் பழச்சாறுகளின் விலை உயரும். கண்கண்ணாடிகள், ஒப்பனை உபகரணங்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் விலையும் உயரும். பற்பசைகள், பல்சிகிச்சைக்கு பயன்படும் பொருட்களின் விலையும் உயரும். முகச்சவர கிரீம், லோஷன் உள்ளிட்டவற்றின் விலையும் உயரும். குளியலறைப் பொருட்கள், அறை நறுமணமூட்டி உள்ளிட்டவற்றின் விலையும் உயரும். கனரக வாகன டயர்களுக்கான விலையும் அதிகரிக்க உள்ளது. பட்டுத்துணிகள், காலணிகள், ராசிக்கற்கள், வைரம், டிசைனர் ஜுவல்லரி நகைகளின் விலையும் அதிகரிக்க உள்ளது.

இதே போன்று ஸ்மார்ட் வாட்சுகள், அறைகலன்கள், படுக்கை விரிப்புகள், விளக்குகளின் விலையும் உயர உள்ளது. சைக்கிள்கள் பைக்குகளுக்கான பேனல்கள், விளையாட்டு உபகரணங்கள் வீடியோகேம்களின் விலையும் உயரும். சிகரெட்டுகள், லைட்டர்கள், மெழுகுவர்த்திகள் ஆகியவற்றின் விலையும் உயரும். இறக்குமதியாகும் ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் விலையும் அதிகரிக்க உள்ளது.

இதே நேரத்தில் இறக்குமதி செய்யப்படும் முந்திரி பருப்புகள், சோலார் தகடுகள் தயாரிக்கப்படும் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றின் விலை குறையும். காது கேட்கும் கருவிகள் தயாரிப்பதற்கான உபகரணங்களின் விலை குறையும். மின்னணு உபகரணங்களில் பயன்படும் ஸ்குரூக்களின் விலை குறைய உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்