குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும், பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று புயல் சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரபிக் கடலில் கடந்த வாரத்தில் உருவான ‘டவ்-தே’ புயலால் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா, கோவாமற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் இந்த புயல் நேற்று முன்தினம் இரவு, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது.
புயல் கரையைக் கடந்தபோது மும்பை மற்றும் குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் 175 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனையடுத்து, பலத்த காற்று வீசியதால் 16,500 வீடுகள் சேதமடைந்தன. மேலும், 40,000 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. குஜராத்தில் 5,951 கிராமங்களில் இருந்து மின் தடை ஏற்பட்டது.
இந்நிலையில்,’டவ்-தே’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து மோடி ஆய்வு நடத்தி வருகிறார். குஜராத் மாநிலத்தில் டவ்-தே புயல் ஏற்பட்ட சேதங்களை ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார். குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் பிரதமர் மோடியுடன் சென்று புயல் சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…