இந்தியா முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் இந்த நவராத்திரி விழா அதிக கொண்டாட்டத்துடன் இருக்கும். தென்மாநிலங்களில் அநேக இடங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படும்.
இந்த நவராத்திரி விழாவிற்க்காக தற்போது குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் உள்ள பெண்கள் வித்தியாசமான முறையில் தயாராகி வருகின்றனர். அதாவது, அவர்கள் தங்கள் முதுகில் பல்வேறுவிதமான சமூக அக்கறை கொண்ட டாட்டூக்களை வரைந்து வருகின்றனர்.
இந்த டாட்டூக்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டமான சந்திராயன்-2, போக்குவரத்து விழிப்புணர்வு ஓவியங்கள், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பிரிவான 370 என பல சமூக அக்கறை கொண்ட ஓவியங்களை தங்கள் முதுகில் வரைந்து வருகின்றனர்.
இந்த டாட்டூ வரைந்த வட இந்திய பெண்களின் முதுகுகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. இனி யாரும் ஜன்னல் வைத்த ஜாக்கெட் என்று கிண்டல் செய்ய முடியாது. அதிலும் சமூக அக்கறையை காட்டும் வகையில் இந்தப் பெண்கள் செய்துள்ளனர்.
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…