இந்தியாவில் 100 பிரத்யேக ஆப்பிள் ஸ்டோர்களை திறக்க டாடா குழுமம் திட்டம்! வெளியான தகவல்.!
இந்தியாவில் 100 பிரத்யேக ஆப்பிள் ஸ்டோர்களை திறக்க டாடா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாடா குழுமம் இந்தியா முழுவதும், ஆப்பிள் இன்க் தயாரிப்புகளை மட்டுமே விற்கும் சுமார் 100 பிரத்யேக ஆப்பிள் ஸ்டோர்களை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்டோர்கள் ஒவ்வொன்றும் 500-600 சதுர அடியில் இருக்கும் என்றும் ஆப்பிள் முன்னணி விற்பனையாளர் ஸ்டார்களை(1000 சதுர அடி) விட சிறியது என்பது குறிப்பிடத்தக்கது.
எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ள செய்தியின்படி, ஆப்பிள் நிறுவனம் டாடாவுக்குச் சொந்தமான இன்பினிட்டி ரீடெய்ல் நிறுவனத்துடன் இணைந்துள்ளது, முன்னதாக டாடா குழுமத்துக்குச் சொந்தமான இன்பினிட்டி ரீடெய்ல் நிறுவனம், ‘குரோமா’ எனும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் ஸ்டோர்களை நடத்தி வருகிறது.
இதன்மூலம் டாடா குழுமத்தின் இன்பினிட்டி ரீடெய்ல், ஆப்பிள் அங்கீகாரம் பெற்ற மறுவிற்பனையாளராக இருக்கும் மற்றும் ஷாப்பிங் மால்கள், பெரிய கடைவீதிகள் இருக்கும் இடங்களில் ஸ்டோர்களை அமைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஆப்பிளின் சிறந்த விற்பனையாளர்களில் ஒன்றான தைவானின் விஸ்ட்ரான் நிறுவனத்துடன், டாடா நிறுவனம் இந்தியாவில் ஐபோன்களை உருவாக்கும் கூட்டு முயற்சிக்கான பேச்சுவார்த்தையில் இருப்பதாக ப்ளூம்பெர்க் செப்டம்பர் மாதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.