பூஷன் ஸ்டீல் நிறுவனத்தை வாங்கியது டாடா குழுமம்..!
நிதி அமைச்சர் பியூஷ் கோயல், பூஷன் ஸ்டீல் நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியதன் மூலம், அந்நிறுவனம் செலுத்த வேண்டிய கடன் தொகையான 36 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.
பூஷன் ஸ்டீல் நிறுவனம் பல்வேறு வங்கிகளில் 48 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி இருந்தது.
இதை திரும்ப செலுத்தாதால் ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. ஏலத்தில் கலந்து கொண்ட டாடா ஸ்டீல் நிறுவனம், பூஷன் ஸ்டீல் நிறுவனத்தின் 72 சதவீத பங்குகளை வாங்கியது. இதற்கான தொகை 36 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வங்கிகளுக்கு செலுத்தப்பட்டது.
பூஷன் ஸ்டீல் பெற்ற கடனில் 90 சதவீத தொகையை வங்கிகள் திரும்பப் பெற்று விட்டதாக கூறியுள்ள நிதி அமைச்சர் பியூஷ் கோயல், இது பிரதமர் மோடியின் மிகப்பெரிய வரலாற்று சாதனை என்று பாராட்டியுள்ளார்.