நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த 5ம் தேதி தொடங்கி, கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சமீபத்தில் மத்தியில் ஆளும் தே.ஜ கூட்டணியிலிருந்து விலகிய தெலுங்கு தேசம் கட்சியும், ஆந்திர மாநில எதிர்கட்சியான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் தற்போது போராடி வருகிறது. அதேநேரம் தமிழக மக்களுக்குக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அதிமுக எம்.பிக்களும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்ற செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
இந்நிலையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தன. எதிர்கட்சிகளின் ஆதரவை இரு கட்சிகளும் பெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற செயல்பாடுகள் இன்று தொடங்கியபோது, அதிமுக எம்.பிக்கள் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோஷம் எழுப்ப, மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரம் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…