தென்னை விவசாயிகள் நலன் கருதி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
தென்னை விவசாயிகள் நலன் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் உச்சவரம்பை அதிகப்படுத்த வேண்டும் என அதில் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மேலும், தென்னை விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்தில் 25 சதவீதமாக இருக்கும் கொப்பரை தேங்காய் உச்சவரம்பை 40 சதவீதமாக உயர்த்தவேண்டும் எனவும், 56 ஆயிரம் டன்னாக இருக்கும் கொப்பரை தேங்காய் உச்சவரம்பை 90 ஆயிரம் டன்னாக உயர்த்த வேண்டும். 2019ஆம் ஆண்டு முதல் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த ஆரம்ப கால கொள்முதல் நிலவரம் படி, சந்தை விலையை விட குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்ட்டது. இதனை அடுத்து 2022க்கு பிறகு உற்பத்தி அதிகமாகியுள்ளது.
ஆதரவு விலை திட்டத்தின்கீழ், நடப்பாண்டில், 2023 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்திற்குள், 56,000 மெட்ரிக் டன் என்ற இலக்கில் 47,513 மெட்ரிக் டன்: கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இன்னும் கொப்பரை கையிருப்பு அதிகமாக இருப்பதாலும், சந்தை விலை தொடர்ந்து குறைவாக இருப்பதாலும், ஆதரவு விலைத் திட்டத்தின்கீழ் கொள்முதல் செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கொப்பரையின் அளவை அதிகரிக்குமாறும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…