மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் தமிழிசை.! ஆளுநர் பதவிகளுக்கு குட்’பை’.!
Tamilisai Soundararajan : தமிழக பாஜக மாநில தலைவராக முன்னர் பொறுப்பில் இருந்தவர் தமிழிசை சௌந்தராஜன். 2019 மக்களவை தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக எம்பி கனிமொழியை எதிர்த்து களமிறங்கினார். அந்த தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
Read More – தயவு செய்து கிழே இறங்குங்கள்.. தொண்டர்களிடம் கெஞ்சிய பிரதமர் மோடி.!
பின்னர், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும், தெலுங்கானா மாநில ஆளுநராகவும் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டு தேர்தல் அரசியலில் இருந்து விலகி ஆளுநராக செயல்பட்டு வந்தார். தற்போது மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கபட்ட சமயத்தில் தனது ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
Read More – இதுதான் நாங்க போட்டியிடும் ‘சாதகமான’ தொகுதி.! காங்கிரஸ் திட்டவட்ட அறிவிப்பு.!
தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் தமிழிசை அனுப்பியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்து மீண்டும் தேர்தல் அரசியலில் தமிழிசை களமிறங்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி மக்களவை தொகுதி, திருநெல்வேலி மக்களவை தொகுதி அல்லது மீண்டும் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.