அமித்ஷா கண்டித்த விவகாரம் – பதிலளிக்க தமிழிசை மறுப்பு.!
சென்னை : நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வி குறித்து அண்ணாமலைக்கும், தமிழிசைக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, சமீபத்தில் அண்ணாமலைக்கு எதிராக தமிழிசை பேசிய வீடியோக்கள் கட்சிக்குள் சலனத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், ஆந்திராவில் இன்று சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையிலேயே, தமிழிசையை அழைத்து அமித்ஷா கோபத்துடன் கண்டித்ததாக தெரிகிறது. மேலும், தமிழக பாஜகவினருக்கு இடையே நடக்கும் உட்கட்சி விவகாரம் குறித்து அறிக்கை கேட்டுள்ளதாக தெரிகிறது
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து, தமிழனை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது என தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
#Tamilisai deserves justice.#AmitShah should know better.#BJPinsultsTamils pic.twitter.com/U7MZxn8T3T
— Sheriff Ali Ibn El Kharish (@mindgage) June 12, 2024
தற்பொழுது, விழா முடிந்து சென்னை திரும்பிய தமிழிசையிடம், இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில், தமிழிசை அக்கா அமித்ஷா என்ன சொன்னார்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ”கை கூப்பியவாறு” கேள்விக்கு பதிலளிக்காமல் புறப்பட்டுச் சென்றார் தமிழிசை சௌந்தரராஜன்.\
இனிமேல் மைக்க நீட்டினால் இப்படி தான் “நன்றி, வணக்கம்” இது மட்டும் தான் வரணும். கூட்டணி, நடவடிக்கை பேச்சு எல்லாம் இனி வரும் ? 😂#Annamalai | #Tamilisai | #WarRoom pic.twitter.com/ELvSkscqfk
— Karthi (Modi Ka Parivar) (@SaffronSurge3) June 12, 2024
உண்மைலேயே தமிழிசையை அழைத்து அமித்ஷா கோபத்துடன் கண்டித்ததாரா? இல்லையா என்று இந்த விவகாரம் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் விரைவில் விளக்கமளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.