“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்! 

உ.பி பள்ளிகளில் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. மொழி தொடர்பாக பல்வேறு கட்சிகள் அரசியல் செய்கின்றன என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

UP CM Yogi adityanath

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை மூலம் ஹிந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்கிறது என திமுக உள்ளிட்ட தமிழக பிராந்திய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், மும்மொழி கொள்கை மூலம் மாணவர்கள் இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து படிக்கலாம் இதில் இந்தி திணிக்கப்படவில்லை எனக் பாஜகவினர் கூறி வருகின்றனர்.

இப்படியான சூழலில் உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அண்மையில் தனியார் செய்தி நிறுவனமான  PTI-க்கு ஒரு நேர்காணல் பேட்டி அளித்து இருந்தார். அதில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்பேட்டியில் மும்மொழி கொள்கை சார்ந்தும் தனது கருத்தை முன்வைத்தார்.

அவர் கூறுகையில், வெவ்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்வது ஒரு மாநில பிராந்திய மொழியின் முக்கியத்துவத்தை குறைக்காது என்றும், தங்கள் மாநிலத்தில் செயல்படும் அரசு பள்ளிகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளை மாணவர்களுக்குக் கற்பிப்பதாகவும் யோகி ஆதித்யநாத் கூறினார்.

“இந்த மும்மொழி கொள்கை மூலம் மாநில பிராந்திய மொழிகளுக்கு உரிய மரியாதை கிடைப்பதை உறுதி செய்கிறது. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த சிறப்பு உள்ளது. இந்த மும்மொழி கொள்கை மூலம் மற்ற மாநில மொழிகளை கற்றுக்கொள்வது என்பது தேசிய ஒற்றுமையின் மூலக் கொள்கையாக மாறுகிறது” என்று ஆதித்யநாத் கூறினார்.

“ஒவ்வொரு பிராந்திய மொழியும் அதன் பாரம்பரிய மரபுகளையும், வரலாறுகளையும் கொண்டுள்ளது. அவை நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தி அதனை வலுப்படுத்துகின்றன என்று யோகி கூறினார்.  இதன் மூலம், உத்தரபிரதேசம் வளர்ந்து வருவதாகவும், இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், மொழியின் மீது அரசியலில் ஈடுபட்ட தலைவர்களைக் கொண்ட மாநிலங்கள் படிப்படியாக சரிந்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், மொழி அரசியலில் இதுபோன்ற சிறு அரசியல் அம்மாநில இளைஞர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும், இந்த மொழி அரசியலில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அதைச் செய்கிறார்கள். அதனால்தான் அந்த மாநிலங்கள் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகின்றன.

அவர்களுக்கு வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் தங்களுக்கான அரசியல் பலன்களை அடைய மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறார்கள் என்று உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அந்த பேட்டியில் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்