கனடாவில் தமிழக மாணவி மீது கத்திக்குத்து.! தவிக்கும் மாணவியின் தந்தை.! நடந்தது என்ன.?

Default Image
  • கனடாவின் டொரொண்டோவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க சென்ற தமிழகத்தின் குன்னூரை சேர்ந்த பெண்ணை மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.
  • இதுதொடர்பாக யார்க் பல்கலைக்கழக வளாகம் அருகே அடையாளம் தெரியாத நபரால் ரேச்சல் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக டொரொண்டோ நகர காவல்துறை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

தமிழகத்தின் குன்னூரை சேர்ந்த ஆல்பர்ட் என்பவரின் இரண்டாவது மகள் 23 வயது ரேச்சல். குன்னூரில் பள்ளிக் கல்வியை படித்த அவர், பெங்களூருவில் இளநிலை பட்டப்படிப்பை பெற்ற பிறகு, சுமார் மூன்றாண்டுகள் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். பள்ளி, கல்லூரி படிப்பில் சிறந்து விளங்கிய அவருக்கு, கனடாவின் மிகப் பெரிய நகரமான டொரொண்டோவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் முழு கல்வி உதவித்தொகையுடன் பட்ட மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைக்க, அங்கு கடந்த ஆண்டு முதல் விநியோகச் சங்கிலி மேலாண்மை (Supply chain management) பயின்று வருகிறார்.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு யார்க் பல்கலைக்கழக வளாகம் அருகே அடையாளம் தெரியாத நபரால் ரேச்சல் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக டொரொண்டோ நகர காவல்துறை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அந்த பெண்ணை தாக்கிய பிறகு அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களை கொண்டு அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் டொரொண்டோ நகர காவல்துறையின் அந்த பதிவில் கூறியிருந்தனர். பின்னர் டொரொண்டோ நகர மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள, ரேச்சலை பார்ப்பதற்காக கனடாவுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அவரது தந்தை  ஆல்பெர்ட்.

அவர் கூறுகையில், பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை போன்று, கனடாவிலும் படிப்பில் சிறந்து விளங்கிய தனது மகளை பொறாமையின் காரணமாக உடன் படிக்கும் மாணவரே தாக்கியிருக்கக் கூடும் என்று ஆல்பர்ட் சந்தேகிக்கிறார். இந்நிலையில், தன்னிடம் எப்படி நீ மட்டும் இவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறாய் என்று அடிக்கடி கேட்டு தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தன்னை தொந்தரவு செய்வதாக எனது மகள் என்னிடம் கூறியதுண்டு. எனவே, அந்த சக மாணவர் தான் ரேச்சலை தாக்கி இருப்பாரா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ரேச்சல் அடையாளம் தெரியாத நபரால் அவரது கழுத்துப் பகுதியில் பலமுறை குத்தப்பட்டு, சம்பவம் நடந்த நடைபாதையில் சிறிது தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக கனடாவை சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், எனது மகளின் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பில் விளக்கமளித்துள்ளது. ஆனால், இந்திய வெளியுறவுத் துறையின் உதவியுடன், விசா கிடைத்த உடனேயே கனடாவுக்கு செல்ல உள்ளேன். நான் நேரில் சென்ற பிறகுதான் அனைத்து விசயங்களும் தெரிய வரும் என்று ரேச்சலின் தந்தை தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 11 02 2025
NarendraModi -Thaipoosam
India vs England 3rd ODI
champions trophy 2025 india squad
aadhav arjuna - prashant kishor
kanja karuppu
riyan parag