தமிழ் ராக்கர்ஸ் இணைத்தளத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் !
தமிழ் ராக்கர்ஸ் இணைத்தளங்களில் புதியதாக வரும் திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுவதால் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.இதன் காரணமாக தயாரிப்பாளர்கள் என்ன தான் முயற்சி செய்தலும் அதற்கான பலன் இல்லை.சமீபத்தில் வெளியான தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டனர்.
இந்நிலையில் அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் , மற்றும் டிவி தொடர்களை தமிழ் ராக்கர்ஸ் மற்றும் லைம் டோரென்ட்ஸ் ஆகிய இணைத்தளங்கள் அனுமதியின்றி வெளியிடுவதால் இந்த இணைய தளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சய் நருலா தமிழ் ராக்கர்ஸ் மற்றும் லைம் டோரென்ட்ஸ் ஆகிய இணை தளங்களுக்கு தடை விதிக்குமாறு இணை தள நிறுவங்களுக்கு இடைக்கால உத்தரவு விட்டார் .
மேலும் தயாரிப்பு நிறுவனம் காப்புரிமையை மீறும் அனைத்து இணையதளங்களையும் இடைநீக்கம் செய்யுமாறு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் தொலைத் தொடர்புத் துறைக்கு உத்தரவிட்டார்.