வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் புதுச்சேரி பேருந்துகளில் தமிழக போக்குவரத்து டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது கழக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் கவனத்திற்கு தெரிவிப்பது யாதெனில், நமது கழகத்தின்மூலம் இயக்கப்படும் தொலைதூர பேருந்துகளை, தமிழ்நாடு போக்குவரத்து கழக பரிசோதனை ஆய்வாளர்கள் பரிசோதனை செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஆதலால், நமது பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்து கழக பரிசோதனை ஆய்வாளர்கள் பரிசோதனை செய்ய நிறுத்தினால், பேருந்துகளை நிறுத்தி பரிசோனைக்கு வேண்டிய பயணச்சீட்டு இயந்திரம், வழிதட பட்டியல், பயணிகள் விபர பட்டியல் போன்ற பரிசோதனைக்கு உரிய ஆவணங்களை எந்தவித தடைகளும் கூறாமல் அவர்களிடம் சமர்பித்து பரிசோதனைக்கு ஒத்துழைக்குமாறு கோரப்படுகிறது.
மேலும், பரிசோதனையின்போது அவர்களிடம் எந்தவித வாக்குவாதத்திலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…