தொழில் வளத்தில் தமிழ்நாடு நாட்டிலேயே சிறந்து விளங்குகிறது.! ஆந்திர நிதியமைச்சர் பாராட்டு.!
இந்தியாவிலேயே தொழில்வளமானது மிகுவும் சிறந்து விளங்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு தலைசிறந்து காணப்படுகிறது. – ஆந்திர நிதியமைச்சர் புக்கனா ராஜேந்திரநாத்.
தமிழகத்தில் தொழில்வளர்ச்சி என்பது மிக சிறப்பாக இருப்பதாக அண்டை மாநில அமைச்சர் கூறியுள்ளார். ஆந்திர நிதியமைச்சர் புக்கனா ராஜேந்திரநாத் தமிழகத்தில் தொழில்வளம் பற்றியும் தொழில்துறை வளர்ச்சி குறித்தும் பெருமையாக பேசியுள்ளார்.
தமிழ்நாடு முன்னிலை : அவர் கூறுகையில், ‘ இந்தியாவிலேயே தொழில்வளமானது மிகுவும் சிறந்து விளங்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு தலைசிறந்து காணப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது என்று குறிப்பிட்டார்,
தமிழ்நாடு – ஆந்திரா : மேலும், தமிழகத்தில் கடல்சார் தொழில், கல்வி, சுகாதாரம் மற்றும் பாரம்பரிய தொழில் உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு – ஆந்திரா என 2 மாநிலங்களும் கூட்டாக செயல்பட்டால் நன்றாக இருக்கும் என தனது விருப்பத்தையும் ஆந்திர நிதியமைச்சர் புக்கனா ராஜேந்திரநாத் தெரிவித்தார்.