சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தொடர்ந்து 3-வது முறையாக முதலிடத்தை தக்கவைத்த தமிழகம்!
இந்தியா டுடே சார்பில் வெளியிடப்பட்டுள்ள, சிறந்த மாநிலங்களின் பட்டியலில், தொடர்ந்து 3-வது முறையாக முதலிடத்தை தக்க வைத்துள்ளது தமிழகம்.
சிறந்த மாநிலங்களின் பட்டியலை, இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதில், அகில இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் சிறப்பான முறையில் செயல்படுவதாக என இந்தியா டுடே கூறியுள்ளது.
மேலும் இந்தியா டுடே சார்பில், டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அவர்களுக்கு இந்தியா டுடே சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.