கொரோனா பாதிப்பில் கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் 3வது இடத்தில் உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு.
தினசரி கொரோனா பாதிப்பில் கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கொரோனா அதிகரிக்கிறது என்றும் இந்தியாவில் 13 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கு அதிகமான கொரோனா நோயாளிகள் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதுபோன்று 6 மாநிலங்களில் 50,000 முதல் ஒரு லட்சம் வரை கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். 17 மாநிலங்களில் 50,000க்கும் கீழ் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, தமிழகத்தில் நேற்று 28,978 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 14,09,237 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. அதுபோல இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,29,942 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 2,29,92,517 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…