தமிழ்நாடு பொதிகை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக, 2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி விமானநிலையம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு, சிறப்பு பிரதிநிதி விஜயன் மற்றும் திமுக எம்பிக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அதனை தொடர்ந்து, டெல்லியில் தயாராகும் திமுக அலுவலகத்தை ஆய்வு செய்த பின், சாணக்கியாபுரத்தில் இருக்கக் கூடிய தமிழ்நாடு பொதிகை இல்லத்திற்கு வந்தடைந்தார். தமிழக தலைமையை செயலாளர், சிறப்பு பிரதிநிதி விஜயன், திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட முதல்வர், தனது அறைக்கு செல்கிறார். அங்கு அவர், திமுகவை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…