டெல்லி சென்றடைந்தார் தமிழக முதல்வர் பழனிசாமி ! உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு
பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி சென்றடைந்தார்.
முதல்வர் பழனிசாமியுடன்,அமைச்சர் ஜெயக்குமார் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.பிரதமர் மோடியை நாளை நேரில் சந்தித்து, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்துக்கு பேரிடர் நிவாரணம் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் கூறப்படுகிறது.டெல்லி சென்றடைந்த முதல்வர் பழனிசாமி இன்று மாலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.