தமிழிசை தாயார் மறைவு : பிரதமர் மோடி ஆறுதல்!
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் தாயார் மறைவுக்கு பிரதமர் மோடி அவர்கள் தொலைபேசியில் ஆறுதல் கூறியுள்ளார்.
தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் கிருஷ்ணகுமாரி அவர்கள், நேற்று காலை வயது முதிர்வு காரணமாக காலமானார். தாயார் கிருஷ்ணகுமாரி அவர்களின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி அவர்களும் தமிழிசை அவர்களிடம் தொலைபேசி மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழிசை அவர்கள் தனது ட்விட்டர் பதிவில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் இன்று காலை 10.00 மணியளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது தாயாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்தார்கள்.
மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள் அலுவலக பணிகளுக்குக்கிடையே நேரம் ஒதுக்கி ஆறுதல் தெரிவித்தது எனக்கு உந்துதல் சக்தியாக புதிய மனபலத்தை தந்தது. அவர்தம் வழிகாட்டுதலில் புதிய உத்வேகத்துடன் மக்கள் பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் இன்று காலை 10.00 மணியளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது தாயாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்தார்கள். (1/2)@PMOIndia @narendramodi
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 19, 2021
மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள் அலுவலக பணிகளுக்குக்கிடையே நேரம் ஒதுக்கி ஆறுதல் தெரிவித்தது எனக்கு உந்துதல் சக்தியாக புதிய மனபலத்தை தந்தது.அவர்தம் வழிகாட்டுதலில் புதிய உத்வேகத்துடன் மக்கள் பணியாற்றுவேன் .(2/2)
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 19, 2021