ஆளுநர் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு உள்ளது. இது பற்றி எனக்கு விளக்கம் தர ஆளுநருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கிரண்பேடி நீக்கத்தை தொடர்ந்து, புதிய ஆளுநராக தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பதவியேற்றார். இந்நிலையில் அவர் பதவியேற்ற நாள் அன்று, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அழைத்து, வரும் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு புதுச்சேரி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு இருப்பதாகவும், கடிதத்தில் நியமன உறுப்பினர்களை பாஜக என்று குறிப்பிட்டுள்ளார் என்றும், நியமன உறுப்பினர்களை பாஜகவினர் என்று சபாநாயகர் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, ஆளுநர் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு உள்ளது. இது பற்றி எனக்கு விளக்கம் தர ஆளுநருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…