கோவின் என்ற இணைய பக்கத்தில், மாநில மொழிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 9 மொழிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோவின் இணையதளத்தில், தடுப்பூசி செலுத்த விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்நிலையில், இந்த கோவின் என்ற இணையதள பக்கம் ஆங்கில மொழியில் மட்டுமே செயல்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் பிராந்திய மொழிகளில், தமிழ், கன்னடம்,மலையளம் போன்ற அனைத்து மாநில மொழிகளிலும், இந்த இணையதளம் செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது இந்த கோவின் என்ற இணைய பக்கத்தில், மாநில மொழிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 9 மொழிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்க கூடிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உட்பட பல அரசியல் பிரபலங்கள் இணையம் வாயிலாக தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…