COWIN இணையப்பக்கத்தில் தமிழ் மொழி சேர்ப்பு…!

Published by
லீனா
  • கோவின் இணையப்பக்கத்தில் தமிழை தவிர்த்து 9 பிராந்திய மொழிகள் சேர்க்கப்பட்டது.
  • கோவின் இணையப்பக்கத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோவின் இணையதளத்தில், தடுப்பூசி செலுத்த விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்நிலையில், இந்த கோவின் என்ற இணையதள பக்கம் ஆங்கில மொழியில் மட்டுமே செயல்பட்டு வந்தது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் பிராந்திய மொழிகளில், இந்த இணையதளம் செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கோவின் என்ற இணைய பக்கத்தில், ஜூன் 4-ம் தேதி மாநில மொழிகள் சேர்க்கப்பட்ட நிலையில், தமிழ் மொழி தவிர்த்து, 9 பிராந்திய மொழிகள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது. இது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உட்பட பல அரசியல் பிரபலங்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

இதனையடுத்து, கோவின் இணையப்பக்கத்தில் தமிழ் மொழி  சேர்க்கப்படாததற்கு  கண்டனங்கள் எழுந்த நிலையில், ஜூன்-5ம் தேதி அனைத்து பிராந்திய மொழிகளும் நீக்கப்பட்டு ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே இடம் பெற்றது. இந்நிலையில், ஜூன் 6-ம் தேதி தமிழை தவிர்த்து நீக்கப்பட்ட 9 பிராந்திய மொழிகளும் மீண்டும் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது, கோவின் இணையப்பக்கத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.
Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

3 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

8 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

8 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

9 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

9 hours ago