40 ஆண்டுகளாக இரண்டாவது ஆட்சிமொழியாக இருந்த தமிழ் மொழி! ஹரியானாவின் ஆச்சரியம்!
ஹரியானா மாநிலத்திலும், மகாராஷ்டிரா மாநிலத்திலும் அடுத்து சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதற்கான தேர்தல் வேலைகளில் தற்போது அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹரியானா மாநிலம் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அதாவது 2010-க்கு முற்பட்ட 40 ஆண்டுகளாக தமிழ் மொழியானது அங்கு இரண்டாவது ஆட்சி மொழியாக இருந்து வந்துள்ளது. முதன்மை மொழியாக ஹிந்தியும் இரண்டாவது ஆட்சி மொழியாக தமிழும் இருந்துள்ளது. இதற்கு காரணம் அங்கு இருப்பவர்களுக்கே சரிவர தெரியவில்லை.
அதன்பிறகு 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சியை பிடித்தவுடன் தற்போது பஞ்சாபி மொழி அங்கு இரண்டாவது ஆட்சி மொழியாக உள்ளது. அங்கு பாஜக முதல்வர் மனோகர் லாரி கட்டாரியும் சில சமயம் தமிழில் பேசுவாராம்.
ஹரியானா மாநிலத்தில் இந்துக்களே அதிகம் அவர்கள் 87 சதவீதம் பேர் உள்ளனர். மீதம் முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளனர்.