பரேலியில் மதக்கலவரத்தை தடுத்து நிறுத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜி.முனிராஜ், ஐ.பி.எஸ். அதிகாரியை ‘சிங்கம்’ எனக் கூறிப் பாராட்டுகள் குவிகின்றன.
சிங்கம் இந்திப் படத்தில் வரும் நடிகர் அஜய் தேவ்கன் போல சித்தரிக்கப்பட்டிருக்கும் முனிராஜ்.
பரேலியில் மதக்கலவரத்தை தடுத்து நிறுத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜி.முனிராஜ், ஐ.பி.எஸ். அதிகாரியை ‘சிங்கம்’ எனக் கூறிப் பாராட்டுகள் குவிகின்றன.
இதனால், உருவான மதக்கலவரச் சூழலை, பரேலி மாவட்ட மூத்த காவல்துறை கண்காணிப்பாளரான (எஸ்எஸ்பி) ஜி.முனிராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்து தடுத்தார்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஜி.முனிராஜ் கூறும்போது, ‘‘முஸ்லிம்களிடம் பேசி முகரம் ஊர்வலத்தை வேறு பாதையில் பயணிக்கச் செய்தேன். எம்எல்ஏவான பப்பு, அவரது மகன் விக்கி பர்தோல், அவர்களது ஆதரவாளர்கள் என 15 பேர் மீதும், ஆயுதங்களுடன் திரண்ட முஸ்லிம்களில் 27 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்துள்ளேன். சுமார் 10 வருடங்களுக்கு பின் முகரம் ஊர்வலம் மதக்கலவரம் இன்றி முடிந்துள்ளது’’ எனத் தெரிவித்தார்.
பாஜக எம்எல்ஏவான பப்பு மீது வழக்குப் பதிவு செய்தமைக்காகவும், மதக்கலவரத்தை அடக்கியதற்காகவும் ‘சிங்கம்’ இந்திப் படத்தின் நாயகன் அஜய் தேவ்கானுக்கு பதிலாக முனிராஜின் புகைப்படத்துடனான பதிவுகள் உ.பி.வாசிகளின் வாட்ஸ்-அப்களிலும் வைரலாகி வருகிறது. அவரை ‘சிங்கம்’ திரைப்பட நாயகன் போல் சித்தரித்து சில இந்தி நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியின் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவரான முனிராஜ், இதுபோல் ஆளும் கட்சியினர், அவர்கள் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது முதன் முறையல்ல. இதற்கு முன் அவர் அருகிலுள்ள புலந்த்ஷெஹர் மாவட்ட எஸ்எஸ்பியாக இருந்த போதும், பாஜக, பஜ்ரங்தளம் மற்றும் முதல்வர் யோகி துவக்கிய இந்து யுவ வாஹிணி ஆகியவற்றின் மீதும் பல்வேறு காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்துநடவடிக்கை எடுத்திருந்தார்.
DINASUVADU
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…