பிஜேபி ஆளும் உ.பி_யில் மதகலவரத்தை தடுத்த தமிழ் ஐபிஎஸ் அதிகாரி..!!

Default Image

சிங்கம் இந்திப் படத்தில் வரும் நடிகர் அஜய் தேவ்கன் போல சித்தரிக்கப்பட்டிருக்கும் முனிராஜ்.

பரேலியில் மதக்கலவரத்தை தடுத்து நிறுத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜி.முனிராஜ், ஐ.பி.எஸ். அதிகாரியை ‘சிங்கம்’ எனக் கூறிப் பாராட்டுகள் குவிகின்றன.

உத்தரபிரதேச மாநிலம், பரேலியில் கடந்த வெள்ளிக்கிழமை முகரமை ஒட்டி  முஸ்லிம்கள் ஊர்வலம் நடைபெற்றது.இந்த ஊர்வலமானது பித்ரி செயின்பூரின் முக்கிய பாதையில் செல்ல பாஜக எம்எல்ஏவான பப்பு பர்தோல் என்கிற ராஜேஷ் மிஸ்ரா எதிர்த்தார். இதில் தடுப்புகளை அகற்றச் சென்ற பரேலியின் நகர போலீஸ் எஸ்பி, ஏஎஸ்பி உள்ளிட்ட 20 போலீஸார், பப்புவின் ஆட்களால் சுற்றிவளைக்கப்பட்டனர். அதேசமயம், அருகிலுள்ள பகுதியில் மசூதி எரிக்கப்பட்டதாக கிளம்பிய வதந்தியை நம்பி சுமார் இரண்டாயிரம் முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் திரண்டனர்.

இதனால், உருவான மதக்கலவரச் சூழலை, பரேலி மாவட்ட மூத்த காவல்துறை கண்காணிப்பாளரான (எஸ்எஸ்பி) ஜி.முனிராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்து தடுத்தார்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஜி.முனிராஜ் கூறும்போது, ‘‘முஸ்லிம்களிடம் பேசி முகரம் ஊர்வலத்தை வேறு பாதையில் பயணிக்கச் செய்தேன். எம்எல்ஏவான பப்பு, அவரது மகன் விக்கி பர்தோல், அவர்களது ஆதரவாளர்கள் என 15 பேர் மீதும், ஆயுதங்களுடன் திரண்ட முஸ்லிம்களில் 27 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்துள்ளேன். சுமார் 10 வருடங்களுக்கு பின் முகரம் ஊர்வலம் மதக்கலவரம் இன்றி முடிந்துள்ளது’’ எனத் தெரிவித்தார்.

பாஜக எம்எல்ஏவான பப்பு மீது வழக்குப் பதிவு செய்தமைக்காகவும், மதக்கலவரத்தை அடக்கியதற்காகவும் ‘சிங்கம்’ இந்திப் படத்தின் நாயகன் அஜய் தேவ்கானுக்கு பதிலாக முனிராஜின் புகைப்படத்துடனான பதிவுகள் உ.பி.வாசிகளின் வாட்ஸ்-அப்களிலும் வைரலாகி வருகிறது. அவரை ‘சிங்கம்’ திரைப்பட நாயகன் போல் சித்தரித்து சில இந்தி நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியின் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவரான முனிராஜ், இதுபோல் ஆளும் கட்சியினர், அவர்கள் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது முதன் முறையல்ல. இதற்கு முன் அவர் அருகிலுள்ள புலந்த்ஷெஹர் மாவட்ட  எஸ்எஸ்பியாக இருந்த போதும்,  பாஜக, பஜ்ரங்தளம் மற்றும் முதல்வர் யோகி துவக்கிய இந்து யுவ வாஹிணி ஆகியவற்றின் மீதும் பல்வேறு காரணங்களுக்காக வழக்குப் பதிவு  செய்துநடவடிக்கை எடுத்திருந்தார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்