தேசிய கல்விக்கொள்கையின் மாநில மொழிபெயர்ப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் அசாமி, கன்னடம், மராத்தி, மலையாளம் உள்ளிட்ட 17 மொழிகள் இடம்பெற்றுள்ள நிலையில், தமிழ் மொழிபெயர்ப்பு இல்லை.
புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு, ஜூலை 29-ம் தேதியன்று ஒப்புதல் அளித்தது. இதில் இளங்கலை படிப்பிற்கு மாணவர்கள் சேர வேண்டுமானால் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும், மாநிலங்களில் மூன்று மொழி கொள்கை, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அதில் இடம்பெற்றுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கிளம்பியது. இந்த தேசிய கொள்கை, ஆரம்பத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டது.
மேலும், தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மொழி பேசும் மக்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு வெளியிட்டுளள்து. இந்நிலையில், தேசிய கல்விக்கொள்கையின் மாநில மொழிபெயர்ப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், அசாமி, போடோ, கன்னடம், மராத்தி, மலையாளம், தெலுங்கு, கொங்கணி, குஜராத்தி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, பெங்காலி, பஞ்சாபி, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய 17 மொழிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த மாநில மொழிபெயர்ப்பில் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பு இடம்பெறவில்லை. இந்த தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு பலரும் தங்களின் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…