தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் ஜம்மு மற்றும் லாடக்கை தலைநகராக கொண்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டணம் தெரிவித்தது.
ஒருபுறம் சென்றுகொண்டிருக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,இந்தியா தனது அணு ஆயுத கொள்கையை எப்போது வேண்டுமானாலும் சூழ்நிலைக்கேற்ப மாற்றிகொள்ளும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் ஹரியனாவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,பாகிஸ்தான் தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தில் தவறான முடிவை எடுத்து வருகிறது. ஆனால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் பாகிஸ்தான் ஆக்கிரமைப்பு காஷ்மீர் விவகாரம் குறித்து தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.அதுவும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…
சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…