பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்களுடன் இன்று பேச்சுவார்த்தை..!
தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எண்ணெய் நிறுவனங்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் டீசல் விலையும் உயர்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 79 ரூபாய் 79 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 71 ரூபாய் 87 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
இந்நிலையில் இன்று மாலை பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப்பிரதான் எண்ணெய் நிறுவனப் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது. அப்போது பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பது, அல்லது இழப்பை எண்ணை நிறுவனங்கள் ஏற்க வலியுறுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.