லடாக் எல்லை விவகாரம்.. இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே நாளை பேச்சுவார்த்தை!
லடாக் எல்லையில் படைகளை மேலும் விலக்கிக் கொள்வது குறித்து நாளை இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா தரப்பில் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.
இதன்காரணமாக, இரு நாட்டு ராணுவத்திற்கிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்திலும், இரு நாட்டு உயர் அதிகாரிகள் தரப்பிலும், தூதரக அளவிலும் பேச்சுவார்த்தைகள் நடந்தது.
அந்த பேச்சுவார்த்தை முடிவில், இருநாட்டு ராணுவமும் எல்லையிலிருந்து விலகி சென்றது. இதனால் அங்கு நீடித்த பதற்றம் பெரும்பாலும் குறைந்தது. இந்நிலையில், நாளை இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.
எல்லையில் நடந்த மோதலுக்கு பின், ராணுவ தரப்பில் இது நான்காம் பேச்சுவார்தையாகும். இந்த பேச்சுவார்த்தையில் இருநாடும் ராணுவ படைகளை மேலும் விளங்கிக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.