பிரதமர் மோடியை சந்திக்கும் பொழுது எங்கள் கவலைகளை குறித்தும் பேசுங்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு விவசாயிகள் அமைப்பின் தலைவர் ராஜேஷ் திகைத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று அமெரிக்கா வாஷிங்டனில் குவாட் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 4 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இன்று இந்த மாநாடு நடைபெறும் நிலையில், இதற்கு முன்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹரிஸ் உள்ளிட்ட 5 முக்கிய அரசியல் தலைவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசயிருந்தார்.
இந்நிலையில், விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகைத் அதிபர் ஜோ பைடனுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடியை சந்திக்கும் பொழுது இந்தியாவில் கொண்டுவரப்பட்ட புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் போராடுவது குறித்து பேச வேண்டும்.
கடந்த 11 மாதங்களில் மட்டும் 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகவும், எங்களை காப்பாற்ற இந்த கருப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது குறித்து பிரதமர் சந்திப்பின் பொழுது பேச வேண்டும் என ஜோ பைடனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதோ அந்த பதிவு,
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதற்கு…
டெல்லி : ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய விராட் கோலி, வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து, ஹிமான்ஷு…
டெல்லி : 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று (பிப்ரவரி 1)…
டெல்லி : 2025 - 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்தார். வரி…
டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 8வது மத்திய பட்ஜெட் உரையை ஆற்றி வருகிறார். 10 முக்கிய…
டெல்லி : இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் 2025 - 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடளுமன்றத்தில் தாக்கல்…