புவி வெப்பமாதலால் உருகும் இமயமலை – மத்திய பூமி அறிவியல் அமைச்சகம்!
புவி வெப்பமாதலால் உருகும் இமயமலை குறித்து அடுத்தடுத்து ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய பூமி அறிவியல் அமைச்சகம் முன்வந்துள்ளது.
புவி தற்போது அதிக அளவில் வெப்பம் ஆவதாலால் பனிப்பாறைகள் உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இமயமலையில் உள்ள பனிப்பாறையின் ஆழத்தையும், அதிலிருந்து கிடைக்கக்கூடிய தண்ணீரின் அளவையும் ஆய்வு செய்வதற்காக மத்திய பூமி அறிவியல் அமைச்சகம் தற்போது முன்வந்துள்ளது. அடுத்து வரக்கூடிய கோடை காலமான ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இதற்கான பணிகளை துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முதலில் சந்திரா நதி படுகையில் உள்ள 7 பனிப்பாறைகளை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் தண்ணீர் எவ்வளவு கிடைக்கிறது என்பதையும் பனிகளின் அதிகரிப்பு மற்றும் சுருக்கம் குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
தேசிய துருவம் மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி அமைச்சகத்திடம் இதற்கான பொறுப்பு கொடுக்கப்பட்டுளளது. சந்திரா படுகை ஆய்வுகள் வெற்றி பெற்றதற்கு பின்பு, இமயமலையினை சுற்றியுள்ள பகுதிகள் குறித்தும் ஆய்வுகள் அடுத்தடுத்தாதாக மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் விமான மற்றும் ஆளில்லா விமானங்கள் வைத்தும் மற்ற பனிப்பாறைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பனிப்பாறைகள் மற்றும் தண்ணீரின் அளவு குறித்து ஆராய முடியும் என தேசிய துருவம் மற்றும் பெருங் கடல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது