‘வீடியோ எடுத்து அனுப்புங்கள்’ – லஞ்ச ஒழிப்பு உதவி எண்ணை வெளியிட்டார் முதல்வர் பகவந்த மான்..!
இன்று கட்கர் கலானில் பகத் சிங்கின் உருவ படத்திற்கு இன்று மலர்தூவி மரியாதை செலுத்திய பகவந்த் மான் லஞ்ச ஒழிப்பு உதவி எண்-ஐ அறிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர்களான பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர், லாகூர் மத்திய சிறையில், கடந்த 1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவு நாள் மாவீரர்கள் தினம் என அழைக்கப்படுகிறது.
பொதுவிடுமுறை
பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் பஞ்சாப் சட்டப்பேரவையில் பேசிய போது சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23-ஆம் தேதி, மாவீரர் தினத்தையொட்டி பொது விடுமுறை அளிக்கப்படும் என்றும், பகத்சிங்கின் சொந்த கிராமமான கட்கர் கலான் கிராமத்திற்கு நேரில் சென்று அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் பஞ்சம மக்களை கேட்டுக் கொண்டார். அதன்படி இன்று (மார்ச்-23) பள்ளி கல்லூரிக ளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு உதவி எண்
இந்த நிலையில், இன்று கட்கர் கலானில் பகத் சிங்கின் உருவ படத்திற்கு இன்று மலர்தூவி மரியாதை செலுத்திய பகவந்த் மான் லஞ்ச ஒழிப்பு உதவி எண்-ஐ அறிவித்துள்ளார். இதுகுறித்து பகவந்த் மான் பேசியதாவது,’லஞ்ச ஒழிப்பு எண்-ஐ இன்றுமுதல் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துவுள்ளோம். நீங்கள் அளிக்கும் புகார்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். 9501200200 என்ற எண்ணிற்கு வரும் புகார்களை ஆராய்ந்து, எங்களின் பணியாளர்கள் நேர்மையாகவும், கடுமையான நடவடிக்கையும் எடுப்பார்கள். உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் அதை விடியோ எடுத்து அனுப்புங்கள’ எனத் தெரிவித்துள்ளார்.
On the occasion of Shaheedi Diwas, we are launching an anti-corruption helpline. If someone asks you for bribe, send me its audio/video recording on 9501200200. We will take strict action against the corrupts.
Corruption free Punjab will be a true tribute to our freedom fighters pic.twitter.com/WDft5oLlcD
— Bhagwant Mann (@BhagwantMann) March 23, 2022