Actor Rajinikanth - Vatal Nagaraj [File Image ]
காவேரியில் இருந்து தமிழகத்திற்கான தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. காவேரி விவகாரம் தொடர்பாக, காவேரி ஒழுங்கற்று மையம், காவேரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றம் என தொடர்ந்து தமிழக அரசு போராடி வருகிறது.
ஆனால், கர்நாடக அரசு காவிரியில் எங்கள் மாநிலத்திற்கே தேவையான அளவு தண்ணீர் இல்லை அதனால், நாங்கள் தண்ணீர் தரமுடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளது. உச்சநீதிமன்றம் , காவிரி ஒழுங்காற்று மையம் கூறிய அளவீட்டின்படி உரிய அளவு தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், காவேரில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கோரிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நாளை கர்நாடக மாநிலம் முழுவதும் முழு கடையடைப்பு நடத்த 1500க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் நாளை கர்நாடக தலைநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகா அரசியல் கட்சி ஒன்றின் தலைவரான வாட்டாள் நாகராஜ் நேற்று பொதுக்கூட்டத்தில் பேசுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நான் ஒன்று கூறுகிறேன், பெங்களூருவில் ஏராளாமான தமிழர்கள் காலங்காலமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு குடிக்க தண்ணீர் வேண்டாமா? வேண்டாம் என்றால் அவர்களை தமிழகத்திற்கு கூட்டி செல்லுங்கள். அவர்கள் மீண்டும் தமிழகம் பக்கம் வரக்கூடாது.
அதே போல, ரஜினிகாந்த், யார் பக்கம் இருக்கிறார் என்பதை தெளிவாக கூற வேண்டும். அவர் கர்நாடகா பக்கமா.? அல்லது தமிழ்நாடு பக்கமா.? என்பதை தெரிவிக்க வேண்டும் அது வரையில் அவர் கர்நாடகா பக்கம் வர கூடாது. அவர் படங்கள் இங்கு திரையிடப்படக்கூடாது. இது ஒரு எச்சரிக்கை. அவர் விளையாட்டாக இருந்து விட கூடாது. அவர் கர்நாடகாவில் பிறந்து காவிரி நீரைக் குடித்து வளர்ந்ததால் இந்த விவகாரம் குறித்து பேச வேண்டும் என்றும் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…