கண்ணாடியை கழட்டி வைத்துவிட்டு பாருங்கள், சடலங்கள் ஆற்றில் மிதக்கிறது – பிரதமரை விமர்சிக்கும் ராகுல்காந்தி!
கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரதமர் தனது பிங்க் நிற கண்ணாடியை கழட்டி வைத்துவிட்டு பார்த்தால் தான் சடலங்கள் ஆற்றில் மிதப்பதை பார்க்க முடியும் என ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவின் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே தான் செல்கிறது. கொரோனா நாடு முழுவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தினமும் உயிரிழப்புகள் மற்றும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
எனவே, பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா விவகாரத்தினை மத்திய அரசு முறையாக கையாள்வது இல்லை என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஆற்றில் வீசப்பட்டு, பீகார் வந்தடைவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி அவர்கள், கொரோனாவால் பலியானவர்களின் உடல்கள் நதிகளில் அடித்துச் செல்லப்பட்டு கொண்டிருக்கிறது; மக்கள் கொரோனா சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் காத்து இருகின்றனர், மக்களின் வாழ்க்கை பாதுகாப்புக்கான உரிமை பறிக்கப்பட்டு கொண்டிருப்பதாகவும் ஆனால், பிரதமர் மோடி தனது பிங்க் நிற கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு பார்த்தால் மற்ற விவகாரங்களும் தெரியும். இந்த பிங்க் நிற கண்ணாடியில் பார்த்தால் சென்ட்ரல் விஷ்டாவை தவிர வேறு ஒன்றும் தெரியாது என கடுமையாக சாடியுள்ளார். இதோ அந்த பதிவு,
नदियों में बहते अनगिनत शव
अस्पतालों में लाइनें मीलों तक
जीवन सुरक्षा का छीना हक़!PM, वो गुलाबी चश्में उतारो जिससे सेंट्रल विस्टा के सिवा कुछ दिखता ही नहीं।
— Rahul Gandhi (@RahulGandhi) May 11, 2021