மூன்று மாத ஊரடங்கிற்கு பின் தாஜ்மஹால் திறப்பு! ஆனால் சுற்றுலா பயணிகள் இப்படி தான் வர வேண்டும்!
மூன்று மாத ஊரடங்கிற்கு பின் தாஜ்மஹால் திறப்பு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த மூன்று மாத காலமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனால், வணிக வளாகங்கள், சுற்றுலா தளங்கள் என அனைத்துமே மூடப்பட்டிருந்த நிலையில், நாடு முழுவதும், அருங்காட்சியகங்கள் மற்றும் பழங்கால நினைவு சின்னங்கள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து, அரசின் வழிகாட்டுதலின்படி, பிரபல சுற்றுலா தலமான தாஜ்மஹால் இன்று திறக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.