தஹி விவகாரம்..! ‘தயிரு’ என கூறிய ராகுல் காந்தி..! வைரலாகும் வீடியோ..
ராகுல்காந்தி ‘தயிரு’ என கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தயிர் பாக்கெட்டில் (Dahi) தஹி என இந்தியில் குறிப்பிட வேண்டும் என்று உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையமான FSSAI, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களுக்கு கடிதம் எழுதி இருந்தது. மேலும், அரசு கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பாண்ட்லே தயிர் பாக்கெட் மீது (Dahi) தஹி என இந்தியில் அச்சிட FSSAI அறிவுறுத்தியும் இருந்தது.
இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆவின் தயிர் பாக்கெட்டில் ‘தஹி’ என்ற இந்தி வார்த்தை குறித்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ராகுல் காந்தியின் பழைய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2021ம் ஆண்டு புதுக்கோட்டையில் உணவு பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி அவர்களுடன் சேர்ந்து சமைத்து சாப்பிட்டார். அப்பொழுது அவர்கள் சமையலுக்கு தயிரை பயன்படுத்தும் பொழுது, ராகுல் காந்தி ‘தயிரு’ என்று கூறினார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#RahulGandhi is a prophet…#தயிர் #Dahi @RahulGandhi pic.twitter.com/TRzDe7RSHy
— Aathiraa Anand (@AnandAathiraa) March 29, 2023