தப்லீக் ஜமாத் : 1,095 லுக் அவுட் நோட்டீஸ் நீக்கப்பட்டு, 630 பேர் நாடு திரும்பினர்.!

Default Image

ஆகஸ்ட் 24-ஆம் தேதி 1,095 லுக் அவுட் சுற்றறிக்கைகள் (எல்.ஓ.சி) நீக்கப்பட்டு, தப்லீக் ஜமாஅத்தின் 630 வெளிநாட்டு உறுப்பினர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியபோது டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச் 8 முதல் மார்ச் 15-ம் தேதி வரை தப்லீக் ஜமாத் மாநாடு நடைபெற்றது. இதில், பல்வேறு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 1500 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். அங்குள்ள ஒரு வழிபாட்டு தளத்தில்தான் இந்த கூட்டம் நடந்தது. இதனையடுத்து, இந்த மாநாட்டை முடித்து சென்ற வெளிமாநிலத்தவர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பெரும்பாலானோருக்கு பரவ தொடங்கியது.

இந்த நிலையில், டெல்லியில் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 29 வெளிநாட்டவா்கள் மீது சுற்றுலா நுழைவு இசைவு (விசா) நிபந்தனைகளை மீறியதாக தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டம், பேரிடா் மேலாண்மை சட்டம், வெளிநாட்டவா்கள் சட்டத்தின் கீழ் மகாராஷ்டிரா மாநில காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கானா, தான்சானியா, பெனின், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை சோ்ந்தவா்கள் மும்பை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியே 3 மனுக்களை தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் விசாரித்த நீதிபதிகள், தப்லீக் ஜமாத் நிகழ்ச்சி 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. தற்போது, நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை, மனுதாரா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கக் கூடாது என்பதையே காட்டுகிறது. ஒரு நோய் பரவும்போதோ, பேரிடா் நிகழும்போதோ அரசு யாரை பலிகடா ஆக்குவதென்று தேடுகிறது. நோய் பரவியபோது பலிகடாவாக்க தப்லீக் ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா் என்று கூறி, மனுதாரா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தனா்.

இந்நிலையில், ஆகஸ்ட் 24-ஆம் தேதி 1,095 லுக் அவுட் சுற்றறிக்கைகள் (எல்.ஓ.சி) நீக்கப்பட்டு, தப்லீக் ஜமாஅத்தின் 630 வெளிநாட்டு உறுப்பினர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசா விதிகள் மற்றும் தொற்றுநோய்களை மீறியதற்காக இந்தியாவில் சிக்கியுள்ள வெளிநாட்டு தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் பிரச்சினையில், Ministry of External Affairs செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, அவர்களின் தூதரக அமைச்சகத்துக்கு தொடர்புகொண்டு எல்.ஓ.சி.களை நீக்குதல் மற்றும் அந்தந்த நாடுகளுக்கு சுமூகமாக திருப்பி அனுப்புதல் ஆகியவற்றை அமைச்சகம் தீவிரமாக செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்