System தோல்வியடையவில்லை.., மோடி அரசு தோல்வியடைந்துள்ளது- சோனியா காந்தி..!
கொரோனா நிலைமை குறித்து விவாதிக்க “அனைத்து கட்சி கூட்டத்தை அவசரமாக அழைக்க வேண்டும்” என்று பிரதமரை சோனியா காந்தி வலியுறுத்தினார்.
நாட்டின் தற்போதைய கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் வீடியோ கான்பரன்ஸிங் முறையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர் மோடி அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது..? நாம் தெளிவாக இருக்க வேண்டும் இந்தியா பல பலங்களையும், வளங்களையும் கொண்டிருப்பதால் System தோல்வியடையவில்லை என்று கூறினார்.
அந்த வளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்த மோடி அரசு தவறிவிட்டது என்று சோனியா காந்தி கூறினார். கோவிட் தொற்றுநோயைக் கையாள்வது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மோடி அரசை குற்றம்சாட்டினார். கொரோனா நிலைமை குறித்து விவாதிக்க “அனைத்து கட்சி கூட்டத்தையும் அவசரமாக அழைக்க வேண்டும்” என்று பிரதமரை வலியுறுத்தினார்.
“இந்தியா ஒரு ஆபத்தான சுகாதார பேரழிவின் பிடியில் உள்ளது. ஆயிரக்கணக்கானோர் இறந்துவிட்டனர் மற்றும் மில்லியன் கணக்கானோர் அடிப்படை சுகாதார, உயிர் காக்கும் மருந்துகள், ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசிகளை அணுகுவதற்காக தவிக்கின்றனர். மருத்துவமனைகளில், சாலைகளில் அல்லது மக்கள் தங்கள் உயிர்களுக்காக போராடுவதைப் பார்ப்பது மனம் உடைக்கிறது என தெரிவித்தார்.