உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதன் அறிகுறிகள் என்னென்ன?
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மேலும் மக்களுக்கு பல அறிவுரைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு வழங்கி வருகிறது. கொரோனா பாதித்த நோயாளிகளில் 15% பேருக்கு ஆக்சிஜன் அளவு 94 ஐ விட குறைவாக இருக்கிறது. 5% பேருக்கு மட்டுமே 90 ஐ விட குறைந்து உள்ளது. இவர்களுக்கே மூச்சு விடுவதில் அதிக சிரமம் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
அந்த வகையில் நமது உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்தால் என்னென்ன அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்று வெளியிட்டுள்ளது.
அதில் சுவாசிப்பதில் சிரமம் மற்றும் குழப்பம் இருப்பது, தூங்கி எழும்பொழுது சிரமம் ஏற்படுவது, முகம் அல்லது உதடுகள் நீல நிறமாக இருப்பது போன்ற அறிகுறிகளை தெரிவித்துள்ளது.
வயதில் பெரியவர்களுக்கு மார்பில் வலி ஏற்படும் என்றும் தெரிவித்தது. குழந்தைகளுக்கு மூக்கில் எரிச்சல், சுவாசிக்கும் போது முணுமுணுப்பது போல் இருப்பது மேலும், சாப்பிடவோ அல்லது குடிக்கவோ இயலாத வண்ணம் இருப்பது போன்ற அறிகுறிகளை அரசு தெரிவித்துள்ளது.
Be alert to Symptoms of Low Oxygen Level
Warning signs include
????Difficulty in breathing
????Confusion
????Difficulty in waking up
????Bluish lips or faceAdults may develop chest pain
How to restore O2 levels in body? https://t.co/9Dg1ySoyyY
— PIB in Maharashtra ???????? (@PIBMumbai) May 29, 2021