ரூ.13,000 கோடி வங்கி மோசடி: நிரவ் மோடிக்கு சொந்தமான 4 வங்கி கணக்குகள் முடக்கம்

வங்கி கடன் மோசடியில் சிக்கி லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர்.
இந்த மோசடி தொடர்பாக நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது.
அதன்படி நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசாரும் பிறப்பித்தனர். இந்த வழக்கில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் ஒன்றை பிறப்பித்தது.இதனை தொடர்ந்து லண்டன் போலீசார் நிரவ் மோடியை கைது செய்தது.

இந்த நிலையில் வங்கி கடன் மோசடியில் சிக்கி லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரிக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை புகார் அளித்தது. எனவே மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று ரூ.283.16 கோடியை முடக்கியது சுவிட்சர்லாந்து அரசு.சுவிட்சர்லாந்தில் உள்ள நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பூர்வி மோடிக்கு சொந்தமான 4 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025