கொரோனா ஊரடங்கால் மீன் வளர்ப்பு குளமாக மாறிய நீச்சல் குளம்!
கொரோனா ஊரடங்கால் மீன் வளர்ப்பு குளமாக மாறிய கேரளாவின் நீச்சல் குளம்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் போக்குவரத்து, சுற்றுலா தலங்கள் வழிபாட்டு தலங்கள் என அனைத்துமே கடந்த சில மாதங்களாகவே மூடப்பட்ட நிலையில் தான் உள்ளது. இந்நிலையில் சுற்றுலா வருமானத்தை பெரும்பகுதியாக நம்பி இருக்கக்கூடிய சில மாநிலங்கள் மற்றும் நாடுகள் கொரோனாவால் மிக மோசமான வருவாய் இழப்பை சந்தித்துள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள ரிசார்ட் எனும் 150 மீட்டர் நீளமுடைய நீச்சல் குளத்தில் வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளால் ஆண்டு முழுவதும் நிரம்பி வழிய கூடிய இடம் இது தான். ஆனால் தற்பொழுது கொரோனா காரணமாக எந்த ஒரு வருமானமும் இன்றி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் அதன் நிர்வாகம் அந்த நீச்சல் குளத்தை மீன் வளர்க்க கூடிய களமாக மாற்றி சிறப்பாக பயன்படுத்தி வருகிறது. பல இடங்களில் நீச்சல் குளங்கள் பூஞ்சைகளும்பாசிகளாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள ரிசார்ட் நீச்சல் குளம் தற்பொழுது முற்றுப்புள்ளி என்னும் மீன் வகையை அட்டகாசமாக வளர்த்து வருகிறது.
தென்னிந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகப் பிரபலமான உணவான இந்த மீன்களை சுமார் 16,000 எண்ணிக்கையில் வளர்த்து நவம்பர் மாதத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ரிசார்ட் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த மீன்கள் எப்படியும் சந்தையில் 30 லட்சம் வரை மதிப்பைப் பெறும் என ரிசார்ட் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் இந்த நீச்சல் குளத்தில் மீன்கள் வளர்க்க முடியாது என்பதால் அதற்கான இடத்தை தேர்வு செய்து மீன்களை வளர்க்கும் பணியை தொடர நிர்வாகிகள் விரும்புவதாகவும் இதுகுறித்து திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.