குளிர்பானங்களுக்கு ரூ.4.5 ஜிஎஸ்டி விதித்ததால் ஸ்விக்கி நிறுவனத்திற்கு ரூ.20,000 அபராதம்..!

பஞ்சகுலா என்ற பகுதியில் 3 குளிர்பான பாட்டில்களுக்கு ரூ.4.5 ரூபாய் ஜிஎஸ்டி விதித்த காரணத்தால் ஸ்விக்கி நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் தகராறு நிவாரண ஆணையம் ரூ.20,000 அபராதம் விதித்துள்ளது.
கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி ஹரியானாவில் உள்ள பஞ்சகுலா பகுதியில் வசிக்கும் அபிஷேக் கார்க் என்பவர் ஸ்விக்கி ஆப்பிலிருந்து உணவுபொருட்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்துள்ளார். அதில் அவர் சீஸி பூண்டு குச்சிகள், 500 மி.லி கொக்கோகோலாவில் 3 பாட்டில்கள் வாங்கியுள்ளார். இந்த குளிர்பானங்கள் ஒவ்வொன்றின் விலையும் எம்.ஆர்.பி படி ரூ.30 ரூபாய் மட்டுமே.
ஆனால், அந்த 3 குளிர்பானங்களுக்கு ஸ்விக்கி கூடுதலாக ரூ.4.5 ரூபாய் ஜிஎஸ்டி விதித்துள்ளது தெரியவந்துள்ளது. இவர் அந்த பில் படி ரூ.197 ரூபாய் பணமாக அளித்துள்ளார். இதனால் அபிஷேக் கார்க் இந்த செய்தியை ட்விட்டரில் பரவ செய்தார். இதனை ஸ்விக்கி நிறுவனமும் எம்.ஆர்.பி பொருளுக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதை ஒப்புக்கொண்டுள்ளது.
இதனால் அபிஷேக் கார்க் கடந்த 2019 மே 31 ஆண்டு மாவட்ட நுகர்வோர் மன்றத்தை அணுகி புகார் அளித்துள்ளார். இந்த புகாரிலிருந்து ஸ்விக்கி தன்னை தற்காத்துக்கொள்ள உணவகங்கள் மற்றும் வணிகர்களுக்கு மத்தியில் ஊடகமாகவும், இடைத்தரகராகவும் மட்டுமே நிறுவனம் செயல்படுகிறது என்று கூறியுள்ளது. ஆனால், இதனை ஏற்க நுகர்வோர் மன்றம் மறுத்துவிட்டது.
இதனால் ஸ்விக்கி நிறுவனத்திற்கு ரூ.20,000 அபராதம் விதித்து, அதில் ரூ.10,000 ஐ ஹரியானா மாநில குழந்தைகள் நல கவுன்சிலில் டெபாசிட் செய்யப்படும் என்றும், மீத ரூ.10,000 ஐ அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் அளித்தவருக்கு அவரின் சட்ட செலவினங்களுக்காக வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். மேலும், புகார் அளித்த அபிஷேக் கார்க்கிற்கு அவர் அதிக கட்டணம் செலுத்திய தொகையை 9% வட்டியுடன் ஸ்விக்கி நிறுவனம் அவருக்கு அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025